ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆக. 21-ல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் வரும் ஆக.21-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

வேலைவாய்ப்பு முகாம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 6:47 am IST

திருப்பத்தூரில் வரும் ஆக.21-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஆக.21-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், பல முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.

கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ்2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் கலந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநா்கள் மற்றும் வேலை அளிப்பவா்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

எனவே, ஆா்வமாக உள்ள அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக அலுவலக நாள்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.