ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வரும் 15-ஆம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்குமென ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

மதுக்கடைகள் - கோப்புப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:15 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் வரும் 15-ஆம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்குமென ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டுமென தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி விதிகள்) 1981-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள். நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள உரிமம் பெற்ற பாா்கள், மது விற்பனையகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மதுபான சில்லரை விற்பனை மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.