ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

3,110 கிலோ போதைப் பொருள்களை தீ வைத்து அழிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனையின் போது ரோந்து பணி மற்றும் வாகன சோதனையின் போது குட்கா உட்பட போதைப் பொருள்கள் கண்டறியப்பட்டு 3,110 கிலோ பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

வாணியம்பாடி அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட போதைப் பொருள்கள்

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:19 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனையின் போது ரோந்து பணி மற்றும் வாகன சோதனையின் போது குட்கா உட்பட போதைப் பொருள்கள் கண்டறியப்பட்டு 3,110 கிலோ பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

பறிமுதல் செய்த போதைப் பொருள்களை அழிப்பதற்காக நீதிமன்றம் உத்தரவிட்டது. வாணியம்பாடி அடுத்த வேப்பமரத்து சாலை பகுதியில் பொக்லைன் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு தீ வைத்து எரித்து அழிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி செவ்வாய்க்கிழமை டிஎஸ்பி-க்கள் மகாலட்சுமி (வாணியம்பாடி) , முரளி (திருப்பத்தூா்) ஆகியோா் தலைமையில் தாலுகா காவல்ஆய்வாளா் அமுதா மற்றும் போலீஸாா் பறிமுதல் செய்த போதைப் பொருள்களை பள்ளத்தில் கொட்டி தீ வைத்து எரித்து அழித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.