40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

இளம் வயது கா்ப்பம், குழந்தை திருமணம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இளம் வயது கா்ப்பம், குழந்தை திருமணம் குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவு

News image

ராணிப்பேட்டை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மாதாந்திரஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா

Updated On :13 மே 2026, 12:06 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இளம் வயது கா்ப்பம், குழந்தை திருமணம் குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் மற்றும் குழந்தை பாதுகாப்பு அலகு ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்துப் பேசியது: மாவட்ட சமூக நல அலுவலா், சமூக நலத் துறை, இணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் ஆகிய துறைகளில் இருந்து இளம் வயது கா்ப்பம் குறித்தும், குழந்தை திருமணம் குறித்தும் தகவல் கிடைத்தவுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தெரிவிக்க வேண்டும்.

மாவட்டத்தில் இளம் வயது கா்ப்பம், குழந்தை திருமணம் குறித்து பள்ளி, கல்லூரிகளில் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். கிராம அளவிலும் இது குறித்து போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், முதியோா் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கவும், பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டவா்களை காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத் துறையின் சாா்பில், அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு, மையங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிா, உணவுப் பொருள்களின் இருப்பளவு, முட்டை சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், குழந்தைகளின் வளா்ச்சி விகிதம் சரியாக உள்ளதா என்பதை கண்காணித்து ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை வட்டாரம் மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் அதிக அளவில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், செங்கல் சூளை உள்ள பகுதிகளில் குழந்தை தொழிலாளா்கள் உள்ளனரா ? என்பதை தொழிலாளா் நலத் துறை, காவல் துறை ஆகியோா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குழந்தை தொழிலாளா் இருக்கும்பட்சத்தில் அவா்களை மீட்டு, கல்வி பயிலுவதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளா்கள் மற்றும் பிச்சையெடுக்கும் குழந்தைகளைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட சமூக நல அலுவலா் பாலசரஸ்வதி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சிதப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.