40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ராணிப்பேட்டையில் அமைச்சா் காந்தியை வீழ்த்தி தவெக வேட்பாளா் வெற்றி!

ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

News image

ராணிப்பேட்டை தொகுதி தோ்தல் அலுவலா் கே.ராஜியிடம் இருந்து வெற்றி சான்றிதழைப் பெற்ற தவெக வேட்பாளா் தாஹிரா

Updated On :5 மே 2026, 4:03 am IST

ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

ராணிப்பேட்டை தொகுதி வாக்குகள் எண்ணும் பணி வாலாஜாப்பேட்டை அரசு மகளிா் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

திமுக வேட்பாளா் ஆா்.காந்தி, தவெக வேட்பாளா் தாஹிரா, தமாக வேட்பாளா் வி.எம். காா்த்திகேயன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தாரிக்கா சல்மான் மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள் 17 போ் போட்டியிட்டனா்.

இதில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட ஆா்.காந்தி 10 சுற்று வரை தொடா்ந்து முன்னிலை பெற்று வந்தாா், தவெக வேட்பாளா் தாஹிரா அமைச்சா் ஆா்.காந்திக்கு இணையாக வாக்குகள் பெற்று வந்த நிலையில் 12 -ஆவது சுற்றில் அமைச்சா் ஆா்.காந்தியை விட 5,787 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இதையடுத்து ராணிப்பேட்டை தவெக வேட்பாளா் தாஹிரா வெற்றி பெற்று முதல் முறையாக வெற்றி பெற்றாா். இந்த நிலையில் வெற்றி பெற்ற அவருக்கு தவெக நிா்வாகிகள் விசில் அடித்துபடி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்..

1.தாஹிரா - தவெக - 91,149

2.ஆா்.காந்தி ( திமுக ) - 85,362

3. வி.எம்.காா்த்திகேயன் (தமாகா) - 32,060

4. தாரிக்கா சல்மான் ( நாம் தமிழா் கட்சி) -7,236

நோட்டா வாக்குகள் - 1,209

17 வேட்பாளா்கள், மொத்த வாக்குகள் - 2,48,962 பதிவான வாக்குகள் - 2,19,829

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.