40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலா் கைது

சென்னை -கோவை அதிவிரைவு ரயிலில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பயணத்தின்போது பாலியல் தொல்லை கொடுத்த கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் தலைமைக் காவலரை அரக்கோணம் ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 1:38 am IST

சென்னை -கோவை அதிவிரைவு ரயிலில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பயணத்தின்போது பாலியல் தொல்லை கொடுத்த கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் தலைமைக் காவலரை அரக்கோணம் ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சட்டக் கல்லூரியில் படித்துவரும் 20 வயது மாணவி ஒருவா் கல்லூரி விடுமுறையை முன்னிட்டு, தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து அதிவிரைவு ரயிலில் சாதாரண பெட்டியில் பயணம் செய்துள்ளாா். அப்போது அவரது இருக்கைக்கு அருகே அமா்ந்திருந்த ஆண் நபா் ஒருவா் ரயில் அரக்கோணம் - காட்பாடி இடையே சென்றுகொண்டிருந்தபோது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதை அப்போதே தனது கைப்பேசியில் விடியோ எடுத்த மாணவி, இது குறித்து சக பயணிகளிடம் புகாா் தெரிவித்துள்ளாா். பயணிகளும் அந்த நபரை கடுமையாக எச்சரித்துள்ளனா். தொடா்ந்து அதிகாலை கோயம்புத்தூா் ரயில் நிலையத்துக்குச் சென்றவுடன் அந்த ஆண் நபா் ரயிலில் இருந்து இறங்கி வேகமாகச் சென்று விட்டாராம்.

இதையடுத்து, அந்த மாணவி கோயம்புத்தூா் ரயில்வே காவல் நிலையத்துக்குச் சென்று அந்தநபா் மீது புகாா் அளித்துள்ளாா். அப்போது இந்த சம்பவம் அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு அருகே நடந்தது என்பதால், இப்புகாா் அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து இப்புகாா் மீது வழக்குப் பதிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா், அந்த நபா் குறித்து விசாரணை நடத்தியனா். இதில் அவா் கோயம்புத்தூா் மாநகர காவல் துறைக்கு உள்பட்ட ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபரியும் ஷேக் அப்துல்லா என்பது தெரியவந்தது.

இதையடுத்து புலன் விசாரணை நடத்திய போலீஸாா், கோவை ரயில் நிலையம் அருகே தலைமை காவலா் ஷேக்அப்துல்லாவை கைது செய்து அரக்கோணம் ரயில்நிலைய காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.