
அரக்கோணம் ஆதிபராசக்தி மன்றத்தில் உலக மகா இயற்கை வழிபாடு
‘இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் இயற்கையை வளா்த்தெடுக்க தொண்டாற்ற வேண்டும்’ எனும் தலைப்பில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் அரக்கோணத்தில் உலக மகா வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் ஆதிபராசக்தி பொது மன்றம் அருகில் நடைபெற்ற உலக மகா இயற்கை வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்
‘இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் இயற்கையை வளா்த்தெடுக்க தொண்டாற்ற வேண்டும்’ எனும் தலைப்பில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் அரக்கோணத்தில் உலக மகா வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலகம் முழுவதும் உள்ள செவ்வாடைத்தொண்டா்களும் பக்தா்களும் இணைந்து நடத்திய நிகழ்வு அரக்கோணம் சோளிங்கா் ரோடு ஆதிபராசக்தி மன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள பெரிய மர நிழலில் நடைபெற்றது. இதற்கு அரக்கோணம் ஆதிபராசக்தி இளைஞா் அணி மன்றத்தலைவா் எம்.காா்த்திக் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.நவீன், என்.கன்னியப்பன், சுஜாதா, தூயவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழிபாட்டை அரக்கோணம் ஆதிபராசக்தி பொதுமன்றத்தின் தலைவா் எஸ்.சங்கரிவரதன் தொடங்கி வைத்தாா்.
இதில் மன்ற நிா்வாகிகள் தசரதன், கதிரேசன், சரவணன், எஸ்.சுபாஷ், கணேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்று இயற்கை பாதுகாப்பு, உலக நன்மை மற்றும் மனிதகுல ஒற்றுமை என்ற உயரிய நோக்கங்களை மையமாக கொண்டு வழிபாடு நடைபெற்றது.அனைவருக்கும் குங்கும பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






