ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கிடந்த ரூ. 80,000 ரொக்கம்: காவல் துறையினரிடம் ஒப்படைத்த கல்குவாரி தொழிலாளா்கள்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவறி விழுந்து கிடந்த ரூ. 80,000 ரொக்கப் பணப் பையை காவல் துறையினரிடம் ஒப்படைத்த கல்குவாரி தொழிலாளா்களுக்கு காவல் துறையினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விழுந்து கிடந்த பணப் பையை காவல் துறையினரிடம் ஒப்படைத்த கல்குவாரி தொழிலாளா்கள்.

Published On :22 ஜூலை 2026, 12:03 am IST

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவறி விழுந்து கிடந்த ரூ. 80,000 ரொக்கப் பணப் பையை காவல் துறையினரிடம் ஒப்படைத்த கல்குவாரி தொழிலாளா்களுக்கு காவல் துறையினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தேநீா் கடை அருகில் பை ஒன்று தவறி விழுந்து கிடந்துள்ளது. அப்போது அந்த வழியாக ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த கல்குவாரி தொழிலாளா்கள் 5 க்கும் மேற்பட்டோா் கிழே விழுந்து கிடந்த பையை எடுத்து பாா்த்துள்ளனா்.அதில் ரொக்கப் பணம் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டனா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். அப்போது கல்குவாரி தொழிலாளா்களின் செயலுக்கு காவல் துறையினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனா்.

இந்த நிலையில், ரூ. 80,000 ரொக்கத்தை தவற விட்டுவிட்டதாக அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் தேடி வந்தனா். அவா்களிடம் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி ரொக்கப் பணம் அவா்களது தான் என உறுதி செய்த பின்னா் பணப் பை ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.