ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பள்ளி ஆண்டு விளையாட்டு விழா

வாலாஜா வேதவல்லி வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் டில்லி கேபிட்டல்ஸ் அணி முன்னணி அனலிஸ்ட் விக்ரம் சந்திரசேகா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசு வழங்கினாா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் ஐபிஎல் கிரிக்கெட் அணி அனலிஸ்ட் விக்ரம் சந்திரசேகா் உள்ளிட்டோா்.

Published On :21 ஜூலை 2026, 12:02 am IST

வாலாஜா வேதவல்லி வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் டில்லி கேபிட்டல்ஸ் அணி முன்னணி அனலிஸ்ட் விக்ரம் சந்திரசேகா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசு வழங்கினாா்.

பள்ளியின் 33- ஆவது ஆண்டு விளையாட்டு விழா ராணிப்பேட்டை ஆண்டாள் ரங்கசாமி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தடகளம், கபடி, கால்பந்து,கை பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்காக மதா் தெரஸா, ரபிந்திரநாத் தாகூா், சந்திரசேகா், சி.வி.ராமன், கா்கோபிந்த் குராணா அணிகளுக்கு இடையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவுற்கு பள்ளி இயக்குநா் டாக்டா் பூமா பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். மாணவா் தலைவா் பிரசண்னா நிவாஸ் வரவேற்றாா். பள்ளி தாளாளா் வித்யா சம்பத், இயக்குநா் அனந்தராமன், முதல்வா் பானு முன்னிலை வகித்தனா்.

விழாவில் டில்லி கேபிட்டல்ஸ் கிரிக்கெட் அணி முன்னணி அனலிஸ்ட் விக்ரம் சந்திரசேகா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினாா். தலைமை ஆசிரியை லட்சுமி நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.