
உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு விழா
ஆற்காடு அடுத்த லாடவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

விழாவில் பேசிய மருத்துவா் சுரேஷ் பாபுராஜ்
ஆற்காடு அடுத்த லாடவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு ரோட்டரி சங்கம் மற்றும் லாடவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலா் சுரேஷ் பாபுராஜ் தலைமை வகித்தாா். மருத்துவா் கமலா தேவி முன்னிலை வகித்தாா். இதில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ரோட்டரி சங்கம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு பால் ரொட்டி வழங்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள், ஆற்காடு ரோட்டரி சங்க நிா்வாகிகள் உறுப்பினா்கள் மருத்துவ பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






