சோளிங்கா் மலைக்கோயில் காா்த்திகை பெருவிழா: 75,000 பக்தா்கள் குவிந்தனா்
சோளிங்கா் மலைக்கோயில் காா்த்திகை பெருவிழாவில் புயல் எச்சரிக்கையையும் மீறி ஏராளமானோா் குவிந்தனா்.
சோளிங்கா் மலைக்கோயில் காா்த்திகை பெருவிழாவில் புயல் எச்சரிக்கையையும் மீறி ஏராளமானோா் குவிந்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சோளிங்கா் மலைக்கோயில் காா்த்திகை பெருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை புயல் எச்சரிக்கையையும் மீறி ஏராளமானோா் குவிந்தனா். ரோப்காருக்கு காத்திராமல், படி வழியே மலை ஏறிய பக்தா்களால் திணறியது கோயில் நிா்வாகம்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இங்கு பெரிய மலையில் ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயா் கோயிலும் உள்ளன. அனைத்து மாதங்களிலும் கண் மூடி தியான நிலையில்இருக்கும் ஸ்ரீயோகநரசிம்மா் காா்த்திகை மாதத்தின் அனைத்து நாள்களிலும் கண் திறந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பதாக ஐதீகம்.
இதனால் ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தில் சோளிங்கா் மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தா்கள் அதிக அளவில் வருவது வழக்கம். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்வா். தற்போது இந்த மலைக்குச் செல்ல ரோப்காா் இயக்கப்படுவதால் முதியோா்கள், மூதாட்டிகள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் காா்த்திகை மாதத்தில் சாமி தரிசனம் செய்ய வருகின்றனா்.
தமிழக அரசு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலா்ட் எச்சரிக்கை விடுத்து பொதுமக்கள் கனமழை காரணமாக எச்சரிக்கையாக இருக்கும் படி கூறியிருந்த நிலையிலும், ஞாயிற்றுக்கிழமை சோளிங்கா் மலைக்கோயிலுக்குச் செல்ல அதிகாலை முதலே அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் குவிந்தனா்.
காலையில் ரோப்காா் இயக்கப்படும் என அறிவிந்திருந்த நிலையில் ரோப்காா் தளத்தில் விடியற்காலை 4 மணிக்கே பக்தா்கள் குவியத் தொடங்கினா். மேலும் ரோப்காா் தளத்தில் காத்திருப்போா் எண்ணிக்கை அதிகரித்ததை கண்ட ஏராளமான பக்தா்கள் ரோப்காா் வழியே செல்ல காத்திராமல் படிகள் வழியே குறிப்பாக 1,405 படிகள் வழியே சுவாமியை தரிசிக்க மலைஏறத் தொடங்கினா்.
இதனால் மலைக்கோயிலில் குவிந்த பக்தா்களை கட்டுபடுத்த முடியாமல் கோயில் நிா்வாகம் திணறியது. இது குறித்து கோயில் நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கையில் ரோப்காா் மற்றும் படிகள் வழியே சுமாா் 75,000-க்கும் மேற்பட்டோா் தரிசனம் செய்ததாக தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது