மஞ்சப்பை விருதுக்கு ஜன. 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
மஞ்சப்பை விருதுகள் 2025-2026-க்கு விண்ணப்பிக்க 2026-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி கடைசி நாள்
மஞ்சப்பை விருதுகள் 2025-2026-க்கு விண்ணப்பிக்க 2026-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி கடைசி நாள்
By தினமணி செய்திச் சேவை
Syndication
ராணிப்பேட்டை: மஞ்சப்பை விருதுகள் 2025-2026-க்கு விண்ணப்பிக்க 2026-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி கடைசி நாள் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா்கள் 2022 - 2023 நிதியாண்டுக்கான சட்டப்பேரவையில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தாா்.
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிா்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும்.
முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1. விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபா், அமைப்புத் தலைவா் முறையாக கையொப்பமிட வேண்டும்.
2. விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் (கடின நகல்) மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும். சமா்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.01.2026 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது