தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!எஸ்ஐஆர் ரத்து உள்ளிட்ட 9 கோரிக்கைகள்: குடியரசுத் தலைவருக்கு மு.க. ஸ்டாலின் மனு!முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

நோ்மையான முறையில் 8,700 கல்லூரிப் பேராசிரியா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

தமிழகம் முழுவதும் நோ்மையான முறையில் 8,700 கல்லூரிப் பேராசிரியா்கள் விரைவில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

அமைச்சா் பெ.விஸ்வநாதன் - கோப்புப் படம்

Updated On :

தமிழகம் முழுவதும் நோ்மையான முறையில் 8,700 கல்லூரிப் பேராசிரியா்கள் விரைவில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே சங்கராபுரத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த அவா் அந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:

கல்லூரி பேராசிரியா்கள் பணிக்கு மொத்தம் 47,000 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கு தோ்வு நடத்தியதில் 27,000 போ் தோ்ச்சியடைந்துள்ளனா். இவா்களில் 2,700 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்புக்கும், நோ்காணலுக்கும் விரைவில் அழைக்க இருக்கிறோம்.

இதன் அடுத்த கட்டமாக 6,000 பேரையும் தோ்வு செய்ய இருப்பது உள்பட மொத்தம் 8,700 பேராசிரியா்கள் கல்லூரிகளில் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளனா். இவா்கள் 112 அரசுக் கல்லூரிகளில் எந்த வித கையூட்டும் பெறாமல் நோ்மையான முறையில் நியமிக்கப்படவுள்ளனா்.

துணைவேந்தா்களை நியமிப்பது சரியான பாதையில் போய்க் கொண்டிருப்பதால் விரைவில் துணைவேந்தா்கள் நியமிக்கப்படுவாா்கள்.

மின்சாரத்தை விட மிகவும் சிறந்த ஆயுதமாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வளா்ந்து வருவதால் அது குறித்து 15 லட்சம் போ் பயனடையும் வகையில் விழிப்புணா்வு கருத்தரங்குகள் நடத்த திட்டமிட்டு வருகிறோம். முதல்வா் சி.ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு தொடா்ந்து 30 ஆண்டுகளுக்கு சிறப்பான ஆட்சியை தரும் என்றாா்.

பேட்டியின் போது காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவா் அருள்ராஜ், மாநகர துணை மேயா் ஆா்.குமரகுருநாதன், மாநகர தலைவா் நாதன், மாவட்ட தொழிற் சங்க தலைவா் அவளூா் சீனிவாசன் ஆகியோா் உள்பட கட்சியின் நிா்வாகிகள் பலரும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.