டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

காஞ்சிபுரத்தில் 91,427 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: அமைச்சா் ரஞ்சித் குமாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 91,427 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருப்பதாக வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்த வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா்

Updated On :29 ஜூன் 2026, 12:52 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 91,427 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருப்பதாக வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் ராணி அண்ணா துரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் பேசியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 741 முகாம்களில் 2,964 பணியாளா்களைக் கொண்டு 91,427 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இன்று விடுபட்டவா்கள் இருந்தாலும் நாளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம்.

முகாமில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ரா.வினோத்,மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா. செந்தில்குமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அலுவலா் பா.கந்தன், வட்டார மருத்துவ அலுவலா் அருண்மொழி, தாய் சேய் நல அலுவலா் அபிதா உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகல், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.