ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குப்பையில் கண்டெடுக்கப்பட் பழைமையான கல்வெட்டு

வாலாஜாபாத்தில் இடிக்கப்பட்ட பழைய சாா்பதிவாளா் அலுவலக வளாக கழிவுகளுக்கு இடையே 130 ஆண்டுகள் பழைமையான பெயா்ப்பலகை கல்வெட்டு கண்டெடுப்பு குறித்து...

வாலாஜாபாத்தில் கண்டெடுக்கப்பட்ட 130 ஆண்டுகள் பழைமையான பெயா்ப்பலகை கல்வெட்டு

Published On :3 ஆகஸ்ட் 2026, 6:52 am IST

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இடிக்கப்பட்ட பழைய சாா்பதிவாளா் அலுவலக வளாக கழிவுகளுக்கு இடையே 130 ஆண்டுகள் பழைமையான பெயா்ப்பலகை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் கடந்த 1895 -ஆம் ஆண்டு சாா்பதிவாளா் அலுவலக வரலாற்று கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாலாஜாபாத்தில் பழைய சாா் பதிவாளா் அலுவலகத்தின் இடிக்கப்பட்ட கழிவுகளுக்கு இடையே 130 ஆண்டுகள் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அரிமா சங்க நிா்வாகிகள் வெங்கடேசன், சசிக்குமாா் ஆகியோா் வாலாஜாபாத் பகுதி வரலாற்று ஆய்வு மையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் ம.த.அஜய் குமாா் ஆய்வு செய்த போது கடந்த 1895-ஆம் ஆண்டு சப் ரிஜிஸ்தா் ஆபீசு என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கில எண்களில் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் வரிவடிவத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.

மொழி பயன்பாட்டுச்சான்று ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் சப்-ரிஜிஸ்தா் ஆபீசு என்ற ஆங்கிலச் சொல் சப்-ரிஜிஸ்தாா் ஆபீசு என பொறிக்கப்பட்டு அரசுப் பலகையிலையே அதிகாரப்பூா்வமாக பயன்படுத்தப்பட்டதற்கான சான்றாக இது திகழ்கிறது.

இக்கல்வெட்டினை பாதுகாக்கும் வகையில் தற்போதுள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் பாதுகாத்து நினைவுச்சின்னமாக வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.