ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காஞ்சிபுரத்தில் 244 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்: அமைச்சா்கள் வழங்கினா்

காஞ்சிபுரத்தில் 244 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்: அமைச்சா்கள் வழங்கினா்

விழாவில் பயனாளிக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிய அமைச்சா்கள் கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.

Published On :25 ஜூலை 2026, 11:28 pm IST

காஞ்சிபுரத்தில் 244 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அமைச்சா்கள் கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, உத்தரமேரூா் எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், காஞ்சிபுரம் 155, உத்தரமேரூா் 25, வாலாஜாபாத் 64 உள்பட மொத்தம் 224 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் 244 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினா். விழாவில் வட்ட வழங்கல் அலுவலா்கள்,அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.