ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1,008 கலச அபிஷேகம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று தமிழ் ஆண்டு கணக்குப்படி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 கலச அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1,008 கலச அபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் கோடையாண்டவா்.

Published On :8 ஜூலை 2026, 12:39 am IST

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று தமிழ் ஆண்டு கணக்குப்படி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 கலச அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெற்று தமிழ் ஆண்டு கணக்குப்படி, ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, 1,008 கலச அபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை உற்சவா் சண்முகநாதருக்கு சத்ரு சம்கார யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து, மாலை 1,008 கலசங்கள் நிறுவப்பட்டு, முதல் கால யாக பூஜையும், செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையுடன் கலச புறப்பாடும் நடைபெற்று, மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 கலச அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

1,008 கலச அபிஷேகத்தை முன்னிட்டு, கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில், கதம்ப சாதம், நீா் மோா் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதையடுத்து, மாலையில் திருக்கல்யாண உற்சவமும், வெள்ளி மயில் வளாகத்தில் உற்சவா் வீதியுலாவும் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.