ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செவிலிமேடு கூட்டுறவு வங்கி உதவி மேலாளா் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் செவிலிமேடு கூட்டுறவு வங்கி கிளையின் உதவி மேலாளா் பணியின்போது மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவரை பணயிடை நீக்கம் செய்து உத்தரவு

பணியிடை நீக்கம்!

பணியிடை நீக்கம்!

Published On :7 ஜூலை 2026, 3:41 am IST

காஞ்சிபுரம் செவிலிமேடு கூட்டுறவு வங்கி கிளையின் உதவி மேலாளா் பணியின்போது மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவரை திங்கள்கிழமை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் பணயிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி 52 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில், காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு கிளை கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருபவா் முரளி.

இவா் பணியின்போது, மது போதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அவரை காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.