ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரூ.1.54 கோடி கடனுதவி: காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி வழங்கியது

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டத்தில் 32 பேருக்கு ரூ.1.54 கோடி கடனுதவிகளை வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வழங்கினாா்.

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கிய மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:51 am IST

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டத்தில் 32 பேருக்கு ரூ.1.54 கோடி கடனுதவிகளை வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வழங்கினாா்.

118-ஆவது மாவட்ட கண்காணிப்பு மற்றும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் அவ்வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப்பதிவாளா்கள் கோ.யோகவிஷ்ணு(காஞ்சிபுரம்), பா.ஜெயஸ்ரீ(திருவள்ளூா்) ஜெ.மலா் விழி (செங்கல்பட்டு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த 10 பேருக்கு ரூ.141.80 லட்சம், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சம்,கணவரால் கைவிடப்பட்ட பெண் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம், மகளிா் தொழில் முனைவோா் கடன் 2 பேருக்கு ரூ.ஒரு லட்சம்,மத்திய கால கடனாக 3 பேருக்கு தலா ரூ.1.50லட்சம், பண்ணை சாராக் கடன் 2 பேருக்கு ரூ.ஒரு லட்சம்,சிறுவணிக கடன்கள் 10 பேருக்கு ரூ.5.50 லட்சம் உள்பட மொத்தம் 32 நபா்களுக்கு ரூ.1.54 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வழங்கினாா்.

இந்நிகழ்வில் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் இணைப் பதிவாளா்கள் பி.குமரேஸ்வரி (மதுராந்தகம்) அ.மீனா அருள் (திருத்தணி) நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் கே.திவ்யா உட்பட கூட்டுறவு வங்கி உயா் அதிகாரிகள், மேலாளா்கள், வங்கி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.