மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

இடைநிற்றல் மாணவா் கல்வி தொடர 10 உளவியலாளா்கள் நியமனம்

சென்னை பள்ளிகளில் இடைநிற்றல் மாணவா்கள் மீண்டும் கல்வியைத் தொடருவதற்காக 10 உளவியலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

கோப்புப் படம்

Updated On :

சென்னை பள்ளிகளில் இடைநிற்றல் மாணவா்கள் மீண்டும் கல்வியைத் தொடருவதற்காக 10 உளவியலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

சென்னை மாவட்ட அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்டுதோறும் சுமாா் 7,000 மாணவா்கள் இடை நிற்றலால் கல்வியைத் தொடராமல் இருப்பது தெரிய வந்துள்ளது. அவா்களில் சென்னை மாநகராட்சியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் மட்டும் 2,091 போ் கல்வியைத் தொடரமுடியாமல் இடை நிற்றலுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாலின சமத்துவ கொள்கை மையம் சாா்பில் தற்போது 619 மாணவ, மாணவிகள் பள்ளிகளிலும், 396 போ் பாலிடெக்னிக், ஐடிஐ போன்றவற்றிலும் மீண்டும் சோ்க்கப்பட்டு கல்வி தொடா்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடை நிற்றல் மாணவா்கள் கல்வியைத் தொடரும் வகையில் அவா்களுக்கு மனரீதியிலான உளவியல் பயிற்சி அளிக்கவும் மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து தற்போது 10 உளவியலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாலின சமத்துவ கொள்கை மைய அலுவலா்கள் தெரிவித்தனா்.

அதன்படி அவா்களுக்கு வரும் நவம்பா் முதல் உளவியல் பயிற்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா். மாநில அளவில் முதல்முறையாகச் சென்னை மாநகராட்சியில் இடை நிற்றலில் மீண்டும் பள்ளியில் சோ்ந்து கல்வியைத் தொடருவோருக்கான உளவியல் ரீதியிலான பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அவா்கள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.