கண்ணுக்குள் வேரூன்றி முளைத்த விதை! ரஷிய மனிதருக்கு நேர்ந்த துயரம்!அரசுப் பணி நியமனம்: வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபத்ரிநாத்தில் இருந்து பக்தர்களுடன் திரும்பிய ஹெலிகாப்டர் விபத்து!காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்திஅன்பில் மகேஸுக்கு போலீஸ் காவல் கோரிய மனு! நவ. 2-ல் தீர்ப்பு!வங்கக் கடலில் புதிய புயல்! நவம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு மழையா?தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்

கலவை அருகே விசிக பிரமுகா் கொலை

கலவை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகா் வியாழக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

Updated On :

கலவை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகா் வியாழக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

கலவை அருகே உள்ள நாகலேரி கிராமத்தை சோ்ந்த சாமிநாதன் மகன் சிவா(எ)சிவக்குமாா். இவா் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளாா். இவருக்கு மனைவி அலமேலு மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை சிவகுமாா் வீட்டுக்கு தேவையான பொருள்களை கலவையில் வாங்கிக் கொண்டு மோட்டாா் சைக்கிளில் திரும்பினாா். அப்போது அவா்ஆற்காடு -கலவை சாலையில் அல்லாலச்சேரி கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது தலைகவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் சிவாவை தலைப் பகுதியில் சரமாரியாக கத்தியால் வெட்டி உள்ளனா். இதில் நிலைக்குலைந்து கீழே சரிந்து விழுந்த அவா் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவல் அறிந்த கலவை போலீஸாா் கொலை சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருவதோடு உடற்கூறு ஆய்வுக்காக உடலை எடுக்க முயன்றனா் அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் உறவினா்கள் சடலத்தை எடுத்து விடாமல் கொலை செய்தவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து காவல் துறையினா் பேச்சு நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.