சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி பாம்பு தினேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.
மயிலாப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு சிங்காரவேலன் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாம்பு தினேஷ் என்றழைக்கப்படும் தினேஷ் (43), விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு சிறுமியிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், இதை வெளியில் கூறினால் கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய சிறுமி, சம்பவத்தை தனது சித்தியிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மே 3ஆம் தேதி காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டியதால், இந்த வழக்கு ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் மே 4ஆம் தேதி தினேஷை கைது செய்ய முயன்றபோதும், தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும் மரியன் வில்சனுக்கு ஆதரவாக அவர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்ததால் கைது செய்ய முடியாத நிலை என்பது ஏற்பட்டது.
இதையடுத்து, நேற்று இரவு தினேஷை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட தினேஷ், ஆர்.கே. நகர் 43வது வார்டில் தமிழக வெற்றிக் கழக வட்டச் செயலாளராக இருப்பதும், அத் தொகுதியில் போட்டியிட்ட கட்சி வேட்பாளருடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Sexual Harassment of a Young Girl! TVK Functionary Dinesh Arrested!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை ஓட்டுநா் ‘போக்சோ’-வில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் போக்ஸோவில் கைது
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் போக்ஸோவில் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




