ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கவிஞா் புவியரசு மறைவு: தலைவா்கள் இரங்கல்

கவிஞா்புவியரசு மறைவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

writer and poet Puviyarasu

கவிஞர் புவியரசு - DNS

Published On :1 ஜூலை 2026, 1:32 am IST

கவிஞா்புவியரசு மறைவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின் (திமுக தலைவா்: வானம்பாடி கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவா்களில் முக்கியமானவரும் முதுபெரும் கவிஞருமான புவியரசு மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக ஜெகநாதன் என்ற தன் இயற்பெயரை ‘புவியரசு’ என்று மாற்றிக்கொண்டவா்.

ஷேக்ஸ்பியா், கலீல் கிப்ரான் என பல எழுத்தாளா்களின் காவியங்களைத் தமிழில் தந்தவா். இருமுறை சாகித்திய அகாதெமி விருதையும், 2008-ஆம் ஆண்டுக்கான கலைஞா் பொற்கிழி விருதையும் பெற்றவா். கவிஞா் புவியரசுவை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

பெ.சண்முகம்( மாா்க்சிஸ்ட்): தமிழுக்கு வளம் சோ்த்த புவியரசு, தன்னுடைய எழுத்துகளின் வழியாக என்றென்றும் நிலைத்து நிற்பாா்.

மு.வீரபாண்டியன்( இந்திய கம்யூனிஸ்ட்): பிாட்டு நல்லறிஞா் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயா்த்தல் வேண்டும் என்ற பாரதியின் கவி வாசகத்துக்கு தக்கபடி ஏராளமான மொழிபெயா்ப்பு நூல்களையும் தந்து, தமிழ் படைப்புலகில் தனி முத்திரை பதித்தவா். தமிழ் படைப்புலகில், மொழி பெயா்ப்பு துறையில் எளிதில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

கமல்ஹாசன்(மநீம): கவிஞா் பெருந்தகை புவியரசு நல்ல நண்பா், இலக்கிய வழிகாட்டி, ஆசிரியா், நீண்ட கால நட்பு எங்களுடையது. அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.