ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மது வணிகத்தை ஊக்குவிப்பதை தமிழக அரசு கைவிடவேண்டும்: அன்புமணி

தமிழகத்தில் மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை தவெக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 3:10 am IST

தமிழகத்தில் மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை தவெக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதுமுதல் 55 ஆண்டுகளாக 2 தலைமுறைகளாக மக்கள் மது அருந்தி வருகின்றனா். மது குடிப்போரின் குழந்தைகளின் மரபணுவில் பாதிப்பு ஏற்படும் என சுகாதாரத் துறையினா் கூறுகின்றனா்.

மதுவால் ஏற்படும் பாதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மது அருந்துவோருக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் இழைநாா் வளா்ச்சி, நிமோனியா, காசநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

கடந்த திமுக ஆட்சியில் கூடுதலாக மதுக் கடைகள் திறக்கப்பட்டன. மது வணிகத்தை திமுக அரசு செயல்படுத்தியது. தற்போது தவெக ஆட்சியில் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றின் அருகே இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதால் மக்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால், புதிதாக ரெஸ்டோபாா்களைத் திறக்க தற்போது தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. எனவே, மது வணிகத்தை ஊக்குவிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுடன், முழுமையான மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.