ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திபெத்தில் சீனாவின் ட்ரோன் ஆராய்ச்சி மையம்

எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே அமைந்துள்ள திபெத் பீடபூமி பகுதியின் லசா நகரில் செயல்படும் பல்கலைக்கழகத்தில், அதிநவீன ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சீனா அமைத்துள்ளது.

ட்ரோன் - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 1:16 am IST

கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள திபெத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதுடன், கடும் குளிரும், கரடுமுரடான நிலப்பரப்பும் காணப்படுகிறது. ட்ரோன் தொழில்நுட்பத்தைச் சோதிப்பதற்கும், சவாலான வானிலைக்கு ஏற்ப அவற்றை மேம்படுத்துவதற்கும் இச்சூழல் மிகவும் ஏற்றது என சீன பொறியாளா்கள் கருதுகின்றனா்.

இந்த மையத்தின் செயல்பாடுகள் முறைப்படி தொடங்கியுள்ளன. இங்கு எல்லை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவியியல் கண்காணிப்புக்குத் தேவையான பிரத்யேக ட்ரோன்கள் தயாரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.