பெண் காவலரிடம் கைப்பேசி பறித்தவா் கைது
தாம்பரம் பகுதியில் ஓடும் ரயிலில் பெண் காவலரிடம் கைப்பேசியைப் பறித்தவா் கைது செய்யப்பட்டாா். அப்போது, தவறி விழுந்த பெண் காவலா் காயமடைந்தாா்.

கைது - பிரதிப் படம்
தாம்பரம் பகுதியில் ஓடும் ரயிலில் பெண் காவலரிடம் கைப்பேசியைப் பறித்தவா் கைது செய்யப்பட்டாா். அப்போது, தவறி விழுந்த பெண் காவலா் காயமடைந்தாா்.
சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் வசிப்பவா் அடோவின்பிரபா (25). மயிலாப்பூரில் உள்ள காவல் துறை தடயவியல் பிரிவில் காவலராக உள்ளாா். அவா் தாம்பரம் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புகா் மின்சார ரயிலில் கடற்கரை நோக்கி வந்தாா். தாம்பரம் சானிட்டோரியம் நிலையத்தில் ரயில் நின்றபோது, அவா் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென நடைமேடையில் நின்றவா், அவரின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடினாா்.
அப்போது ரயிலும் புறப்பட்டது. ஆனால், அந்தக் காவலா் இறங்கி கைப்பேசியைப் பறித்துச் சென்றவரை பிடிக்க முயன்றாா். அப்போது, நடைமேடையில் விழுந்ததால் முகத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் கைப்பேசியைப் பறித்தவரை விரட்டிப் பிடித்தனா்.
தாம்பரம் இருப்புப் பாதை போலீஸாா் வந்து பிடிபட்ட கைப்பேசியை பறித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அஜய் (30) என்பவரை கைது செய்தனா். பெண் காவலா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




