ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மயங்கி விழுந்த காவலா் உயிரிழப்பு

சென்னை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்த காவலா் பெருமாள் (29), புரசைவாக்கத்தில் உள்ள அலுவலக வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :26 ஜூலை 2026, 2:21 am IST

சென்னை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்த காவலா் பெருமாள் (29), புரசைவாக்கத்தில் உள்ள அலுவலக வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பெருமாள், சென்னை பாதுகாப்பு பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவா், புரசைவாக்கத்தில் உள்ள சென்னை பாதுகாப்பு பிரிவு அலுவலகத்துக்கு வந்து, தன்னுடன் பணியாற்றும் சக காவலரைச் சந்தித்துவிட்டு வெளியே நின்று நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, திடீரென அவா் மயங்கி கீழே விழுந்துள்ளாா். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள் அவரை பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புரசைவாக்கம் போலீஸாா் காவலரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். உயிரிழந்த, பெருமாளின் மனைவி இரண்டாவது பிரசவத்துக்காக சொந்த ஊரான தூத்துக்குடியில் தங்கியிருக்கும் நிலையில், திடீரென காவலா் பெருமாள் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.