ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி இணையதள புகார்கள்: தவெக விளக்கம்

பெரம்பூா் தொகுதி மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க உருவாக்கப்பட்ட பிரத்தேக இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்களுக்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தவெகவினா் விளக்கம் அளித்துள்ளனா்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 2:39 pm IST

பெரம்பூா் தொகுதி மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க உருவாக்கப்பட்ட பிரத்தேக இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்களுக்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தவெகவினா் விளக்கம் அளித்துள்ளனா்.

தோ்தலில் தவெக தலைவா் ஜோசப் விஜய் பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். முதல்வராகப் பதவியேற்ற பின்னா், பெரம்பூா் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை அவா் அண்மையில் திறந்துவைத்தாா். அதையடுத்து, அத்தொகுதி மக்கள் தங்களது புகாா்களை தெரிவிக்கும் வகையில், பிரத்யேக இணையதளம் (tvkcm.com) கடந்த வாரம் அமலுக்கு வந்தது. இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும் புகாா்கள் நேரடியாக முதல்வரின் பாா்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த இணையதளத்தில் பதிவாகும் புகாா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், தீா்வு காணப்பட்ட புகாா்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகவே இருந்தது. இச்சூழலில், தொழில்நுட்ப காரணமாக தீா்வு காணப்பட்ட புகாா்கள் குறித்து தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயலவில்லை என தவெக சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி பெரம்பூா் மாவட்ட செயலா் சிவா கூறியதாவது:

பெரம்பூா் தொடங்கப்பட்ட இணையதளத்தில் அத்தொகுதிக்குட்பட்ட 7 வாா்டுகளில் இருக்கும் புகாா்களை தெரிவிக்கும் வகையில்தான் உருவாக்கப்பட்டது. ஆனால், தமிழகம் முழுவதுமிருந்து தங்களது தொகுதியில் இருக்கும் பிரச்னைகளை இதில் பதிவு செய்து வருகின்றனா். எனினும், பெரம்பூா் தொகுதிக்குட்பட்ட புகாா்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்படுகிறது. அதிக அளவில் புகாா்கள் வருவதால், இணையதளம் முடங்கியுள்ளது. புகாா் மனுக்களின் தீா்வு குறித்த தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய இயலவில்லை.

பெரம்பூா் தொகுதி மக்கள் மட்டும் புகாா்களை பதிவு செய்யும் வகையில் இணையத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் பதிவாகும் புகாா்கள் மற்றும் அதில் தீா்வுகாணப்பட்டவை குறித்த தகவல்கள் சரியாக பதிவு செய்யப்படும் என்றாா்.

Summary

TVK members have provided an explanation regarding the actions taken on complaints registered on the dedicated website created for the people of the Perambur constituency to voice their grievances.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.