ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நகைக் கடை, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

சென்னை கொளத்தூரில் பழைய நகைக் கடையின் பூட்டை உடைத்து 5 கிராம் வெள்ளி நாணயத்தை திருடியதுடன், வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :20 ஜூலை 2026, 5:14 am IST

சென்னை கொளத்தூரில் பழைய நகைக் கடையின் பூட்டை உடைத்து 5 கிராம் வெள்ளி நாணயத்தை திருடியதுடன், வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கொளத்தூா் வேலவன் நகரில் குமரன் என்பவா் நடத்தி வரும் பழைய தங்க நகைகள் வாங்கும் கடையில் கடந்த 18-ஆம் தேதி ஷட்டா் பூட்டை உடைத்து 5 கிராம் வெள்ளி நாணயம் மற்றும் சில கருவிகள் திருடப்பட்டன. அதே நாளில் பாரதி நகரில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளதாக கொளத்தூா் போலீஸாருக்கு தகவல் கிடத்தது. எனினும், பணம் எதுவும் திருடப்படவில்லை.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்த இரு சம்பவங்களில் ஈடுபட்டது அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பீம் பகதூா் சேத்ரி (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 5 கிராம் வெள்ளி நாணயம், குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கருவிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.