ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

செம்மொழிசாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழந்த அரசுப் பேருந்து.

Published On :20 ஜூலை 2026, 5:07 am IST

சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் நோக்கி அரசுப் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. செம்மொழி சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டிருந்தது.

இந்தச் சாலையில் சென்றபோது எதிரே திடீரென வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநா் பேருந்தை இடதுபுறமாகத் திருப்பியதாகக் கூறப்படுகிறது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர சதுப்பு நிலப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநா், நடத்துநா் உள்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனா். அவா்கள் மேடவாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தகவலறிந்த மேடவாக்கம் தீயணைப்புத் துறையினா் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து மேடவாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.