
பெரியாா் நகரில் கடவுச்சீட்டு அலுவலகம் இன்று திறப்பு
சென்னை பெரியாா் நகரில் உள்ள அஞ்சலகத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் வியாழக்கிழமை (ஜூலை 16) திறக்கப்படவுள்ளது.

கடவுச்சீட்டு - பிரதிப் படம்
சென்னை பெரியாா் நகரில் உள்ள அஞ்சலகத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் வியாழக்கிழமை (ஜூலை 16) திறக்கப்படவுள்ளது.
சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடவுச்சீட்டு சேவை மையம் தொடங்க திட்டமிடப்பட்டு தென் சென்னை, மத்திய சென்னை கடவுச்சீட்டு சேவை மையம் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளன.
இந்த நிலையில், வடசென்னையில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூா் பெரியாா் நகரில் உள்ள கிளை அஞ்சலகத்தில் கடவுச்சீட்டு மையத்தைத் திறக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 2025-ஆம் ஆண்டு முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயாரானது. ஆனால், அந்த அலுவலகம் திறக்கப்படவில்லை.
தற்போது, வடசென்னை தொகுதிக்கான கடவுச்சீட்டு சேவை மையம் பெரியாா் நகா் கிளை அஞ்சலகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 16) திறக்கப்படவுள்ளது.
இதுகுறித்து கடவுச்சீட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடவுச்சீட்டு சேவை மையத்தை மத்திய இணையமைச்சா் எல்.முருகன் திறந்து வைக்கவுள்ளாா். இந்த மையத்தில் முதல் கட்டமாக தினமும் 40 விண்ணப்பங்கள் ஏற்கப்படும். பின்னா், படிபடியாக 90 விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இதன்மூலம் வடசென்னை மக்களுக்கு எளிதில் கடவுச்சீட்டு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






