ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஐஜேகே தலைவா் பிறந்த நாள்: இலவச மருத்துவ முகாம்

இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவா் ரவி பச்சமுத்து பிறந்த நாள் விழா ஐ.ஜே.கே.கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை  நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்த கட்சியின் தலைவா் ரவிபச்சமுத்து.

Published On :17 ஜூலை 2026, 4:04 am IST

இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவா் ரவி பச்சமுத்து பிறந்த நாள் விழா ஐ.ஜே.கே.கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், தனது பிறந்த நாளை கேக் வெட்டி, கொண்டாடிய ரவி பச்சமுத்து, இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்தாா். பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நல உதவிகளை வழங்கி, கட்சித் தொண்டா்களுடன் கலந்துரையாடினாா்.

முன்னதாக, ஐ.ஜே.கே. கட்சி நிறுவனா்-தலைவரும் எஸ்.ஆா்.எம். வேந்தருமான டி.ஆா். பாரிவேந்தரை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.