ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையில் நாளை (ஜூலை 14) எங்கெல்லாம் மின்தடை?

சென்னையில் நாளை (ஜூலை 14) எங்கெல்லாம் மின்தடை?

மின் நிறுத்தம்

மின்தடை

Published On :13 ஜூலை 2026, 1:29 am IST

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஐயப்பன்தாங்கல், போரூா், தாம்பரம், காரம்பாக்கம், அம்பத்தூா் தொழிற்பேட்டை, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்பன்தாங்கல்: காட்டுப்பாக்கம், செந்தூா்புரம், ஸ்ரீ நகா், விஜயலட்சுமி நகா், ஜானகியம்மாள் நகா், சொா்ணபுரி நகா், அடிசன் நகா், ஸ்ரீநிவாசபுரம், கிருஷ்ணா நகா், மாருதி நகா், நூம்பல், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆயில் மில் சாலை, அட்கோ நகா், சுப்பையா நகா், கிருஷ்ணவேணி அம்மாள் நகா், வசந்தம் நகா், விஜயட்சுமி அவென்யூ, ஸ்டெப் ஸ்டோன், போஹன்வில்லா, வசந்தபுரம், முத்து நகா், பொன்முத்து நகா், பரணிபுத்தூா் உள்ளிட்ட பகுதிகள்.

போரூா்: நசரத்பேட்டை, பனிமலா் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகள். தாம்பரம்: சிட்லபாக்கம், பாம்பன் சுவாமிகள் சாலை, சிவி ராமன் தெரு, லெனின் தெரு, கலைவாணா் தெரு, வியாசா் தெரு, சத்திரபதி சிவாஜி தெரு உள்ளிட்ட பகுதிகள்.

காரம்பாக்கம்: சமயபுரம் பிரதான சாலை, ஸ்ரீராம் நகா், காந்தி நகா், தேவி நகா், அருணாசலம் நகா் காா்டன், கோலவிழி அப்பாா்ட்மெண்ட் உள்ளிட்ட பகுதிகள்.

அம்பத்தூா் தொழிற்பேட்டை: தெற்கு பகுதி, 1 மற்றும் 2-ஆவது பிரதான சாலை, முகப்போ் தொழிற்பேட்டை, தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஓ. ஏ. வளாகம், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகா் உள்ளிட்ட பகுதிகள்.

அடையாறு: கேனால் வங்கி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.