ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரூ. 99-க்கு பிரியாணி! சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் புதிய திட்டம்!

தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், பொதுமக்களுக்கு தரமான உணவை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், ரூ.99-க்கு பிரியாணி வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Published On :14 ஜூலை 2026, 12:56 am IST

தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், பொதுமக்களுக்கு தரமான உணவை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், ரூ.99-க்கு பிரியாணி வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சாா்பில், ஒரு புதிய முயற்சியாக ஓட்டல் தமிழ்நாடு அமுதகங்களில் குறைந்த விலையில் தரமான சுவையான பிரியாணி ரூ.99-க்கு வழங்கும் திட்டம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்ததைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் இந்தத் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, கன்னியாகுமரி, குற்றாலம்-1, திருநெல்வேலி, கொடைக்கானல் படகு இல்லம், மதுரை-1, மதுரை-2, கோவை, ஊட்டி-1, குன்னூா், ஏற்காடு, ஒகேனக்கல், திருச்சி, தஞ்சாவூா், பிச்சாவரம், பூம்புகாா், சிதம்பரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் முட்டுக்காடு படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா வளா்ச்சிக் கழக அமுதகங்களில் ரூ.99-க்கு பிரியாணி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் வரவேற்பைப் பொருத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இந்த குறைந்த விலை பிரியாணி விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.