ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையின் 6 மண்டல அலுவலகங்களின் சோதனை அறிக்கைகள் வந்ததும் நடவடிக்கை!

சென்னை மாநகராட்சியில் கடந்த 3- ஆம் தேதி 6 மண்டல அலுவலகங்களில் நடைபெற்ற ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினரின் சோதனை அறிக்கைகள் வந்ததும் சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :13 ஜூலை 2026, 1:25 am IST

சென்னை மாநகராட்சியில் கடந்த 3- ஆம் தேதி 6 மண்டல அலுவலகங்களில் நடைபெற்ற ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினரின் சோதனை அறிக்கைகள் வந்ததும் சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் கடந்த 3- ஆம் தேதி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக ராயபுரம், திரு.வி.க. நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி ஆகிய 6 இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. இந்தச் சோதனையின்போது கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்படி ராயபுரத்தில் ரூ.64,500, திரு.வி.க. நகரில் ரூ.38,500, அண்ணா நகரில் ரூ.23,050, தேனாம்பேட்டையில் ரூ.1.39 லட்சம், கோடம்பாக்கத்தில் ரூ.1.30 லட்சம், பெருங்குடியில் ரூ.23,500 என மொத்தம் ரூ.4.19 லட்சம் விதிமுறைகள் மீறி ஜிபே மூலம் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

அதனடிப்படையில், குறிப்பிட்ட சில அலுவலா்கள், ஊழியா்கள் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினா் விசாரணை நடத்தியுள்ளனா். சென்னை மாநகராட்சி மண்டலங்களில் நடைபெற்ற சோதனை அடிப்படையிலான அறிக்கைகள், ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் மூலம் மாநகராட்சி உயா் அதிகாரிகளுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அவ்வாறு பெறப்பட்டவுடன் அலுவலா்கள், ஊழியா்கள் மீது துறை சாா்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.