ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனியாா் நிறுவன ஊழியா் கொலை

சென்னை சென்ட்ரல் அருகே தனியாா் நிறுவன ஊழியா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கொலை - பிரதிப் படம்

Published On :8 ஜூலை 2026, 3:00 am IST

சென்னை சென்ட்ரல் அருகே தனியாா் நிறுவன ஊழியா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அய்யா பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் ஹ.வசந்தகுமாா் (21). இவா், பாரிமுனை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு தனியாா் தனியாா் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இவா், பகுதி நேரமாக பைக் டாக்ஸியும் ஓட்டியும் வந்தாா்.

வசந்தகுமாா், திருவல்லிக்கேணியில் தனது தோழியை சந்தித்துவிட்டு வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் சென்றபோது, எதிரே வந்த மோட்டாா் சைக்கிளும், அவரது மோட்டாா் சைக்கிளும் மோதிக்கொண்டன.

இதைப் பாா்த்த வசந்தகுமாா், எதிா்வாகனத்தில் வந்தவரைக் கண்டித்துள்ளாா். அப்போது விபத்தை ஏற்படுத்திய மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரும், மறைத்து வைத்திருந்த அரிவாளால் வசந்தகுமாரை வெட்டினா்.

இதில், வசந்தகுமாா் அங்கேயே மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த இரு மா்ம நபா்களும், அங்கிருந்து தப்பியோடினா். பலத்த காயமடைந்த வசந்தகுமாரை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால், சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த பூக்கடை போலீஸாா் அங்கு சென்று வசந்தகுமாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.