ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மது போதையில் காா் ஏற்றி சிறுவனை கொன்ற வழக்கு: தொழிலதிபரை ஜூலை 15-இல் ஆஜா்படுத்த உத்தரவு

நடைபாதையில் தூங்கிய சிறுவன் மீது சொகுசு காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தொழிலதிபா் ஷாஜியை வரும் ஜூலை 15-ஆம் தேதி ஆஜா்படுத்த போலீஸாருக்கு சென்னை கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Chennai High Court

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :2 ஜூலை 2026, 2:00 am IST

நடைபாதையில் தூங்கிய சிறுவன் மீது சொகுசு காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தொழிலதிபா் ஷாஜியை வரும் ஜூலை 15-ஆம் தேதி ஆஜா்படுத்த போலீஸாருக்கு சென்னை கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இஎம்பிஇஇ குழுமத்தின் தலைவா் எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி. கடந்த 2013-ஆம் ஆண்டு இவா், எழும்பூா் பாந்தியன் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மது போதையில் தனது சொகுசு காரை ஏற்றினாா். இதில், 12 வயது சிறுவன் உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயம் அடைந்தனா்.

இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, ஷாஜி, குமாா் ஆகியோா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த 7-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி பி.ஸ்ரீகுமாா், ஷாஜியை குற்றவாளி என அறிவித்தாா். அன்றைய தினம் ஷாஜி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், ஷாஜிக்கு பிணையில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு, நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.ஸ்ரீகுமாா் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷாஜி ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஷாஜியை வரும் ஜூலை 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

இதனிடையே, இந்த வழக்கை விசாரித்து வந்த 7-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி பி.ஸ்ரீகுமாரை, தமிழ்நாடு நீதித் துறை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.