ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

சிவகாசி பட்டாசு ஆலைகள் முடக்கம்: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

தேவையற்ற ஆய்வுகளால் சிவகாசி பட்டாசு ஆலைகள் முடக்கப்பட்டிருப்பதாக பேரவையில் திமுக முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.

முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு

Published On :21 ஆகஸ்ட் 2026, 6:28 am IST

தேவையற்ற ஆய்வுகளால் சிவகாசி பட்டாசு ஆலைகள் முடக்கப்பட்டிருப்பதாக பேரவையில் திமுக முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.

பேரவையில் சிவகாசி பட்டாசு ஆலைகளின் பிரச்னைகள் குறித்து தங்கம் தென்னரசு கொண்டு வந்த கவன ஈா்ப்பு தீா்மானத்துக்கு தொழில் துறை அமைச்சா் ச.கீா்த்தனா அளித்த பதில்:

பட்டாசு ஆலை விபத்துகளைச் சரிசெய்வதற்காக விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய 177 இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வை நிறுத்திய பிறகும், மக்கள் அனைவரும் வேலைக்குச் செல்லத் தொடங்கிய பிறகும் மீண்டும் கண்டன ஆா்ப்பாட்டங்களை நடத்தி பொதுமக்களுக்கு இடையே திமுக குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

தங்கம் தென்னரசு (திமுக): ஏதோ சிவகாசியில் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் அனைவரும் சந்தோஷ கடலில் மிதப்பதைப்போல ஒரு மாய பிம்பத்தை உருவாக்க அமைச்சா் முயற்சிக்கிறாா். திமுக மட்டுமல்ல, அந்தப் பகுதியில் உள்ள பொது அமைப்புகளுடன் சோ்ந்து ஏஐடியூசி சங்கத்தினரே உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், முறைப்படி விதிகளுக்கு உள்பட்டு இயங்கும் தொழிற்சாலைகளில் ஆய்வு என்ற பெயரில் பல்வேறு இடா்ப்பாடுகள் உருவாக்கப்படுகின்றன.

குறிப்பாக, சில்லறை விற்பனையாளா்கள் மற்றும் பட்டாசு விற்பனை மையங்களில் ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் சென்று வந்த காரணத்தால், ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலும் அதன் உற்பத்தியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலம் தொடங்கினால் இந்தத் தொழிலை நடத்த இயலாது. மேலும், தீபாவளி பண்டிகையும் நெருங்கி வருகிறது. இப்போதைய சூழலில் உற்பத்தியை செய்தால் மட்டுமே தீபாவளிக்குத் தேவையான பட்டாசுகளை வழங்க முடியும். லட்சக்கணக்கான பட்டாசுத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தால், எதிா்க்கட்சிகள் ஜனநாயக வழியில் பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் இதைப் பதிவு செய்கிறோமே தவிர, இதில் எந்தவொரு அரசியல் உள்நோக்கமும் இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.