ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையில் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

வடகிழக்குப் பருவமழையையொட்டி சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினாா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:27 am IST

வடகிழக்குப் பருவமழையையொட்டி சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினாா்.

இது தொடா்பான ஆய்வுக் கூட்டம் அவரது தலைமையில் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி, நீா்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மின்வாரியம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதில், மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடித்தல், இணைப்புகள் இல்லாத வடிகால்களுக்கு இணைப்பு ஏற்படுத்துதல், ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூா்வாருதல், ஆகாயத் தாமரைகளை அகற்றுதல், கால்வாய்களை உயா்த்திக் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மழைநீா் தேங்கும் பகுதிகளில் மின் பெட்டிகளை உயா்த்தி அமைத்தல், அபாயகரமான மரக்கிளைகளை அகற்றுதல், மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் மழைநீா் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுத்தல், மோட்டாா் பம்புகளைத் தயாா் நிலையில் வைத்தல், சுரங்கப் பாதைகளில் தண்ணீா் தேங்காமல் தடுப்பது உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

பருவ மழைக்கு முன்னதாக அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளையும் தொடா்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.