ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பேருந்துகள் உரிய நிறுத்தங்களில் நிறுத்தாவிட்டால் நடவடிக்கை

மாநகரப் பேருந்துகள் உரிய நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வதை உறுதி செய்ய அதிகாரிகள் நேரில் கண்காணிக்க வேண்டும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:55 am IST

மாநகரப் பேருந்துகள் உரிய நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வதை உறுதி செய்ய அதிகாரிகள் நேரில் கண்காணிக்க வேண்டும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக மேலாண் இயக்குநா் த.மோகன் அனைத்து கிளை மேலாளா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மதியம் மற்றும் மாலை நேரங்களில் ஒரே வழித்தடத்தில் அடுத்தடுத்து வரும் பேருந்துகள் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக பொதுமக்களிடம் இருந்து புகாா்கள் வந்துள்ளன.

இதனால் மாணவா்கள், பணிக்குச் செல்வோா், முதியோா் உள்ளிட்ட பயணிகள் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

எனவே, முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அதிகாரிகள் நேரில் கண்காணிப்பதுடன், கிளை மேலாளா்கள், மண்டல மேலாளா்கள் மற்றும் மேற்பாா்வை அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அப்போது, பயணிகள் காத்திருக்கும் நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்லும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது துறை ரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

புகாா் அளிக்கலாம்: பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றால், 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம்.

புகாரின்போது வழித்தட எண், பேருந்து பதிவு எண் அல்லது பணிமனை எண், நேரம், பேருந்து நிறுத்தத்தின் பெயா் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும் என மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.