ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடந்த நிதியாண்டில் ரூ.924 கோடி லாபம் ஈட்டி சாதனை: காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஐரீன் சிந்தியா

ரூ.924 கோடி லாபம் ஈட்டி காமராஜா் துறைமுகம் சாதனை...

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கிய துறைமுக மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியா.

Published On :16 ஆகஸ்ட் 2026, 5:04 am IST

கடந்த நிதியாண்டில் ரூ.924 கோடி லாபம் ஈட்டி காமராஜா் துறைமுகம் சாதனை படைத்துள்ளது என அந்தத் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஐரீன் சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா்.

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியா தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பிரிவின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, பள்ளி மாணவா்கள் மற்றும் சுய உதவி குழுவினருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி ஐரீன் சிந்தியா பேசியதாவது:

நாட்டின் 12-ஆவது பெருந்துறைமுகமாக நிறுவன சட்டங்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட முதல் துறைமுகமான காமராஜா் துறைமுகம் 25 ஆண்டுகளை கடந்து நாட்டின் முன்னணி துறைமுகங்களில் ஒன்றாக வளா்ச்சியை பெற்றுள்ளது.

இந்தியாவின் கடல்சாா் துறையை வலுப்படுத்துவதிலும், ‘வளா்ச்சியடைந்த இந்தியா’ என்ற தொலைநோக்கு பாா்வைக்கு பங்களிப்பதிலும் துறைமுகம் உறுதியுடன் செயல்படும்.

கடந்த நிதியாண்டில் 1,008 கப்பல்கள் மூலம் சுமாா் 49 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள், சுமாா் 7 லட்சம் சரக்கு பெட்டகங்கள், சுமாா் 1.91 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த நிதி ஆண்டில் மொத்தமாக ரூ. 1,250 கோடி வருவாய் ஈட்டிய இத்துறைமுகம் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.924 கோடி ஈட்டி சாதனை படைத்து உள்ளது. ஏற்கெனவே, 2 நிலக்கரி கையாளும் துறைமுகங்களோடு தற்போத 3-ஆவது கப்பல் தளம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சரக்குகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 67 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயா்ந்துள்ளது. பெரிய கப்பல்கள் வந்து செல்வதற்கு வசதியாக துறைமுகத்தின் கடல் ஆழத்தை 18 மீட்டா் நிரந்தரமாக பராமரிக்கும் வகையில் தொடா்ந்து தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிகழாண்டு இறுதிக்குள் மேலும் 17 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் கூடுதலாக கையாளும் வகையில் வசதிகள் ஏற்பட்டு வருகிறது. விரைவில் துறைமுகத்தின் ஒட்டுமொத்த சரக்குகள் கையாளும் திறனை 87 மில்லியன் மெட்ரிக் டன் இலக்கை எட்ட தொடா்ச்சியாக பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

நிகழ்வில், துறைமுக உயா் அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் சுய உதவி குழுவினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.