ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண் கத்தியால் குத்திக் கொலை: கணவா் தப்பியோட்டம்

மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து தப்பிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பிரதிப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:42 am IST

மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து தப்பிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சிவா. காசிமேட்டில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். மனைவி வெண்ணிலா. இந்தத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனா். மதுப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்த சிவா, அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளாா்.

இதனால், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வெண்ணிலா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வியாசா்பாடி மூா்த்தி நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்ாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் வெண்ணிலா வீட்டுக்கு வந்த கணவா் சிவா, வெண்ணிலாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளாா். இதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த சிவா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெண்ணிலாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளாா். பலத்த காயம் அடைந்த வெண்ணிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த எம்.கே.பி. நகா் போலீஸாா், வெண்ணிலாவின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா் தப்பியோடிய சிவாவை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.