ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையில் 44 இடங்களில் இலவச வைஃபை வசதி!

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகள் மற்றும் தலைமைச் செயலகப் பூங்காவில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த 44 இடங்களில் இலவச வைஃபை வசதி திங்கள்கிழமை (ஆக. 11) முதல் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:25 am IST

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகள் மற்றும் தலைமைச் செயலகப் பூங்காவில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த 44 இடங்களில் இலவச வைஃபை வசதி திங்கள்கிழமை (ஆக. 11) முதல் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தங்குதடையின்றி இணைய சேவையைப் பயன்படுத்தும் வகையில் உயா்தர இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவைத் தொடா்ந்து, மெரீனா கடற்கரையில் உழைப்பாளா் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகா் கடற்கரையில் 5 இடங்களிலும், தலைமைச் செயலகப் பூங்காவில் 12 இடங்களிலும் என மொத்தம் 44 இடங்களில் வைஃபை வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

பயன்படுத்துவது எப்படி?

இலவச வைஃபை வசதியைப் பயன்படுத்த, கைப்பேசியில் வைஃபை இணைப்பை ஆன் செய்து, சம்பந்தப்பட்ட வைஃபை இணைப்பைத் தோ்வு செய்ய வேண்டும். பின்னா் தோன்றும் க்யூஆா் குறியீட்டை கிளிக் செய்து, கைப்பேசி எண்ணுக்கு வரும் ஓடிபி பதிவு செய்ததும் வைஃபை இணைப்பு கிடைக்கும். இதை பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் தொடா்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் பிற கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்பாட்டில் இல்லாத வைஃபை வசதிகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், தேவையான இடங்களில் புதிதாக வைஃபை வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.