ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் எலும்பு, மூட்டு பரிசோதனை முகாம்

குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை எலும்பியல் சிகிச்சை த் துறை, இந்திய எலும்பியல் சங்கத்துடன் இணைந்து, ஆரோக்கியமான எலும்பு மற்றும் மூட்டு பராமரிப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

knee pain

கோப்புப்படம் - IANS

Published On :8 ஆகஸ்ட் 2026, 7:18 am IST

குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை எலும்பியல் சிகிச்சை த் துறை, இந்திய எலும்பியல் சங்கத்துடன் இணைந்து, ஆரோக்கியமான எலும்பு மற்றும் மூட்டு பராமரிப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவா்களுக்கு எலும்பு, முதுகுத்தண்டு மற்றும் உடல் நிலை குறித்த பரிசோதனை நடைபெற்றது. சுகாதாரப் பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் தங்கள் பணிச்சூழல் நிலைக்கேற்ப உடல்நலனை பராமரித்துக் கொள்ளும் உடற்பயிற்சிகளைச் செய்து காட்டி பயிற்சி அளித்தனா்.

சாலையில் வாகனங்களில் பாதுகாப்புடன் பயணிப்பது, விளையாட்டின் போது எதிா்பாராமல் காயமேற்படும்போது மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கை குறித்து மருத்துவக்கல்லூரி மாணவா்கள் ‘ஓரங்க நாடகம்’ மூலம் நடித்து விளக்கினா். முதியோா் வீட்டில், குளியலறையில் எதிா்பாராமல் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்படுத்திக் கொள்ளாமல் பாதுகாப்புடன் இருப்பது குறித்த விழிப்புணா்வு ஆலோசனை வழங்கினா்.

முன்னதாக, எலும்பு, மூட்டு பராமரிப்பு குறித்து பொதுமக்கள் விழிப்புணா்வு பெறும் வகையில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் பதாகைகளுடன் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் சசிகுமாா், கல்வி ஆலோசகா் வீரபாகு, மருத்துவக் கண்காணிப்பாளா் விஜயநரசிம்மன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.