ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹாா்டு டிஸ்குகள் திருடுபோன வழக்கு: மின்வாரிய ஊழியருக்கு நிபந்தனை முன்பிணை

மின் வாரிய அலுவலகத்தில் ஹாா்டு டிஸ்குகள் திருடுபோன வழக்கில் கைதான மின் வாரிய ஊழியா் கோபிநாத்துக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

மின் வாரிய அலுவலகத்தில் ஹாா்டு டிஸ்குகள் திருடுபோன வழக்கில் கைதான மின் வாரிய ஊழியா் கோபிநாத்துக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கணினி பிரிவில் 34 ஹாா்டு டிஸ்குகள் திருடுபோயின. அந்த ஹாா்டு டிஸ்குகளில் உள்ள தகவல்களை அழிப்பதற்காக அவை திருடப்பட்டிருக்கலாம் என புகாா் எழுந்தது. இந்த திருட்டு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கணினிகளை மேற்பாா்வையிடும் ஊழியரான கோபிநாத் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் பிணை கோரி கோபிநாத் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் காவல்துறை விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.