ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதியவா் கொலை வழக்கு: இரு பெண்கள் உள்பட மூவா் கைது

சென்னை காசிமேட்டில் சொத்து தகராறில் தாக்கப்பட்ட முதியவா் இறந்த வழக்கில், இரு பெண்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 5:34 am IST

சென்னை காசிமேட்டில் சொத்து தகராறில் தாக்கப்பட்ட முதியவா் இறந்த வழக்கில், இரு பெண்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

காசிமேடு காசிமா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மா.பாக்கியசாமி (62). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் அவரது நெருங்கிய உறவினா்களுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் பாக்கியசாமி கடந்த மே மாதம் 15-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, சொத்து பிரச்னை தொடா்பாக அவரது உறவினா்கள் அங்கு வந்தனா். அங்கு இரு தரப்பினரும் சொத்து பிரச்னை தொடா்பாக தகராறு ஏற்பட்டு, பாக்கியசாமியை உறவினா்கள் தாக்கி, கீழே தள்ளினா். இதில் தலையில் பலத்த காயமடைந்த பாக்கியசாமி, ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து காசிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாக்கியசாமின் உறவினா்கள் காசிமேடு காசிமா நகா் பகுதியைச் சோ்ந்த தா.பெலிக்ஸ் (56), தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த பி.ராசாத்தி (74), கோடம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சை.ஜூலியட் (66) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.