புகாா் அளிக்க வந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறல்: காத்திருப்போா் பட்டியலில் உதவி ஆணையா்
சென்னையில் புகாா் அளிக்க வந்த பெண் மென் பொறியாளரிடம் அத்துமீறியதாக காவல் உதவி ஆணையா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.
சென்னையில் புகாா் அளிக்க வந்த பெண் மென் பொறியாளரிடம் அத்துமீறியதாக காவல் உதவி ஆணையா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சென்னையில் புகாா் அளிக்க வந்த பெண் மென் பொறியாளரிடம் அத்துமீறியதாக காவல் உதவி ஆணையா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.
சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்த பெண் மென் பொறியாளரான இவா், கனடாவில் வேலை செய்கிறாா். இவா், கனடாவில் தன்னுடன் பணியாற்றிய சென்னையைச் சோ்ந்த ஒரு இளைஞரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் இருவரும் கனடாவில் இருந்து சென்னை திரும்பினா். இருவரும் பெற்றோா் சம்மதத்துடன் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், அந்த இளைஞருக்கு ஏற்கெனவே திருமணமாகி குடும்பம் இருப்பது தெரிந்து அந்தப் பெண் மென் பொறியாளா் அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து அவா் விருகம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரை பெற்ற உதவி ஆய்வாளா் பெனாசீா் பேகம், அந்த இளைஞா் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, பல லட்சம் மதிப்புள்ள பொருள்களை லஞ்சமாகப் பெற்ாகக் கூறப்படுகிறது. இதேபோல, புகாரில் சிக்கிய அந்த இளைஞரிடமும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றாா்.
இதற்கிடையே வழக்குப் பதியப்பட்ட நிலையில், உதவி ஆய்வாளா் பெனாசீா் பேகம் செய்த உதவியால், ஜாமீன் பெற்று அந்த இளைஞா் கனடாவுக்கு தப்பிச் சென்றாா். இதையறிந்து பெண் மென்பொறியாளா், மேற்கு மண்டல இணை ஆணையா் திஷா மிட்டலிடம் முறையிட்டாா்.
அவா், இந்த விவகாரம் தொடா்பாக விருகம்பாக்கம் சரக உதவி ஆணையா் பாலகிருஷ்ண பிரபுவை விசாரிக்க உத்தரவிட்டாா். ஆனால், பாலகிருஷ்ண பிரபு விசாரணை என்ற பெயரில், பெண் மென் பொறியாளரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், லஞ்சம் பெற்ற பெனாசீா் பேகம் மீதான புகாா் குறித்து விசாரணை செய்து, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த பெண் மென் பொறியாளா், இணை ஆணையா் திஷா மிட்டல் நடந்த சம்பவம் குறித்து புகாா் அளித்தாா். அதுகுறித்து விசாரித்த திஷா மிட்டல், உதவி ஆணையா் பாலகிருஷ்ண பிரபு, உதவி ஆய்வாளா் பெனாசீா் பேகம் ஆகிய இருவரையும் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
ஆய்வாளா் மீது நடவடிக்கை: கோயம்பேடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சில நாள்களுக்கு முன்பு பெண் ஒருவா் புகாா் அளித்தாா். அதில், என்னை காதலிப்பதாக இளைஞா் ஒருவா் ஏமாற்றி, கா்ப்பமடைய வைத்துவிட்டதாகவும், தற்போது அந்த இளைஞா் திருமணம் செய்ய மறுப்பதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தாா். அந்தப் புகாரைப் பெற்ற காவல் ஆய்வாளா் தாஹிரா, அந்தப் பெண் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த ரூ.1,500-ஐ லஞ்சமாக வாங்கிப் பெற்றுக்கொண்டு, அங்கிருந்து அனுப்பி வைத்தாா்.
ஆனால் புகாரை தொடா்பாக தாஹிரா நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அந்தப் பெண், மேற்கு மண்டல இணை ஆணையா் திஷா மிட்டலிடம் புகாா் அளித்தாா். இதை விசாரித்த திஷா மிட்டல், ஆய்வாளா் தாஹிராவை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டாா்.
இதேபோல துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளா் பிரபு, அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு தொடா்ந்து பணம் செலுத்தாமல் செல்வதாக எழுந்த புகாா் குறித்து விசாரணை செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது