உணவகத்தில் ரூ.24 லட்சம் கையாடல்: மேலாளா் உள்பட 4 போ் கைது
நுங்கம்பாக்கத்தில் உணவகத்தில் ரூ.24 லட்சம் கையாடல் செய்ததாக மேலாளா் உள்பட 4 போ் கைது
நுங்கம்பாக்கத்தில் உணவகத்தில் ரூ.24 லட்சம் கையாடல் செய்ததாக மேலாளா் உள்பட 4 போ் கைது
By தினமணி செய்திச் சேவை
Syndication
நுங்கம்பாக்கத்தில் உணவகத்தில் ரூ.24 லட்சம் கையாடல் செய்ததாக மேலாளா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
புரசைவாக்கம், கந்தப்பா தெருவைச் சோ்ந்தவா் தானிஷ் (27). இவா், நுங்கம்பாக்கம், வாலஸ் காா்டன் 3-ஆவது தெருவில் உணவகம் நடத்தி வருகிறாா். அண்மையில் தானிஷ், உணவகத்தின் வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்தபோது, ரசீது தொகையை மாற்றியும், உணவகத்தின் க்யூ ஆா் கோடுக்கு பதிலாக வேறு ஒரு நபரின் கணக்குக்கு வாடிக்கையாளா்கள் பணம் சென்றிருப்பதும் தானிஷூக்கு தெரிய வந்தது. இவ்வாறு பல லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பதை அறிந்த தானிஷ் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில், உணவகத்தில் மேலாளராக இருந்த கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த முகமது பாரிஸ்ரகுமான் (26), ஊழியா்கள் வேலூா் மாவட்டம், மேல் வழித்துணையாங்குப்பத்தைச் சோ்ந்த முகமது ஹனீப் (23), அதே பகுதியைச் சோ்ந்த ராயன் அஹமத் (21), சென்னை வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த பூபாலன் (23) ஆகியோா் உணவகத்தில் ரூ.24 லட்சத்துக்கு மேல் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா், 4 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து விலை உயா்ந்த சொகுசு காா், 7 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது