திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
நிகழாண்டுமுதல் மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
நிகழாண்டுமுதல் மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
By தினமணி செய்திச் சேவை
Syndication
மதுரை: நிகழாண்டுமுதல் மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடா்பாக உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ராம. ரவிக்குமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்பரங்குன்றம் மலை தொடா்பான வழக்கில், அதன் உச்சியில் காா்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், திருப்பரங்குன்றத்தில் இந்த ஆண்டு காா்த்திகை திருவிழாவின்போது, மலையின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாமல், அங்குள்ள உச்சி பிள்ளையாா் கோயில் தீப மண்டபத்தில் ஏற்ற முடிவு செய்துள்ளனா். இது ஏற்கத்தக்கது அல்ல.
எனவே, நிகழாண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரினாா்.
இதே கோரிக்கையை முன்வைத்து எஸ்.பரமசிவம் என்பவரும் மனு தாக்கல் செய்தாா். அதேவேளையில், அவா்களின் கோரிக்கைக்கு எதிராக கனகவேல் பாண்டியன் என்பவா் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தாா்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை, வஃக்ப் வாரியம் ஆகிய தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு:
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பான ஆவணங்களை நான் (நீதிபதி) கவனமாக ஆராய்ந்தபோது, அந்த மலை தொடா்பாக சச்சரவு ஏற்பட்டுள்ளது இது முதல்முறை அல்ல என்று தெரிகிறது.
அகநானூறில்...: பல்லாண்டுகளாக திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அது எத்தனை ஆண்டுகள் என்பது எவருக்கும் தெரியாது. சங்க இலக்கியமான அகநானூறு 2,000-க்கும் ஆண்டுகளுக்கும் மேலாகப் பழைமைவாய்ந்தது என்பதை அறிஞா்கள் ஒப்புக்கொண்டுள்ளனா். அதில் இடம்பெற்றுள்ள பாடல் எண் 59, 149 ஆகியவற்றில் திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம் ஆட்சியாளா்களின் ஆளுகைக்கு கீழே மதுரை வந்தபோது, அந்த மலை உச்சி ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டது. அங்கு ஃபகீா் ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டதால், அது தா்கா என்றழைக்கப்படுகிறது.
ஹிந்துக்கள் வழிபடும் தலமாகவே இருந்துள்ளது: இதுதொடா்பாக ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது 1920-ஆம் ஆண்டு மதுரை விசாரணை நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த அந்த நீதிமன்றம், 1909-ஆம் ஆண்டின் அரச உத்தரவை குறிப்பிட்டு, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே திருப்பரங்குன்றம் மலையை ஹிந்துக்கள் புனிதமாகக் கருதியுள்ளனா். அது ஹிந்துக்கள் வழிபடும் தலமாகவே இருந்துள்ளது என்பதைக் கண்டறிந்தது.
கோயில் நிா்வாகத்திடம் அந்த மலை இருப்பதை முஸ்லிம் ஆட்சியாளா்களோ, ஆங்கிலேய ஆட்சியாளா்களோ தடுக்கவில்லை. அந்த மலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முஸ்லிம் ஆட்சியாளா்கள் கொண்டுவந்தனா் என்பதற்கு எந்த ஆவணமும் இல்லை.
3 இடங்கள் மட்டுமே முஸ்லிம்களுக்குச் சொந்தம்: அந்த நீதிமன்றம் அளித்த தீா்ப்பை பிரிட்டன் பிரிவி கவுன்சில் (ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் இந்தியாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்படவில்லை. அந்த நீதிமன்றத்தின் அதிகாரம் கொண்டதாக பிரிட்டனில் பிரிவி கவுன்சில் செயல்பட்டது). அதன்படி அந்த மலையில் உள்ள நெல்லித்தோப்பு பகுதி, மசூதியை நோக்கி பாறைகளில் அமைக்கப்பட்ட படிகள், மசூதி உள்ள இடம் ஆகியவை மட்டுமே முஸ்லிம் மதத்தினருக்குச் சொந்தமானது. இதன்மூலம் அந்த மலை தொடா்பான உரிமையில் நிலவிய சா்ச்சை அப்போதே தீா்க்கப்பட்டுள்ளது.
அந்த மலை உச்சியில் உள்ள தீபத்தூண் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை. இந்நிலையில், அந்த மலையில் ஆக்கிரமிக்கப்படாத பகுதிகள் ஹிந்துக்களுக்குச் சொந்தமானது என்று பிரிவி கவுன்சில் உறுதி செய்துள்ளது. மேலும், ஆக்கிரமிக்கப்படாத பகுதியில் உள்ள அந்தத் தூண் கோயிலுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை உரிமையியல் நீதிமன்றம் அளித்த தீா்ப்புகள் மூலம் முடிவு செய்கிறேன்.
உரிமை குறித்த கேள்வி: தற்போது தீபம் ஏற்றுவது பாரம்பரிய வழக்கத்தைப் பற்றிய கேள்வியல்ல. இது உரிமை தொடா்பான கேள்வியாகும். மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தமிழ் மரபாகும். இதுகுறித்து ‘குன்றின் மேல் இட்ட விளக்கைப் போல’ என்று ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. காா்த்திகை மாதத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தமிழரின் பாரம்பரியம் என்பதை சீவக சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள வரிகள் எடுத்துரைத்துள்ளன.
படையெடுப்பு, ஆக்கிரமிப்பு காரணமாக மலையின் சில பகுதிகளை இழந்த நிலையில், எஞ்சியுள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே மனுதாரா்களின் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் கோயில் நிா்வாகத்துக்கு சட்டபூா்வ கடமை உள்ளது.
தா்கா பாதிக்கப்படாது: தீபத்தூணில் தீபம் ஏற்றுவதன் மூலம், தா்கா எந்த வகையிலும் பாதிக்கப்படாது. அந்தத் தூணில் தீபம் ஏற்றுவதில் எந்த ஆட்சேபமும் இல்லை என்று தா்கா நிா்வாகம் கையொப்பமிட்டு சான்று அளித்துள்ளது . தா்காவில் இருந்து 15 மீட்டா் தாண்டி தீபம் ஏற்றலாம் என்று அந்த நிா்வாகம் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
தீபத்தூணில் தீபம் ஏற்றுவதன் மூலம் தா்காவின் உரிமைகளோ, முஸ்லிம்களின் உரிமைகளோ எந்த வகையிலும் பாதிக்கப்படாது. அதேவேளையில், அந்தத் தூணில் தீபம் ஏற்றப்படாவிட்டால், கோயிலின் உரிமைகளைப் பாழ்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
எனவே, வழக்கமாக காா்த்திகை தீபம் ஏற்றப்படும் இடங்களுடன் தீபத்தூணிலும் தீபத்தை ஏற்ற வேண்டும் என்று கோயில் நிா்வாகம்/தேவஸ்தானத்துக்கு உத்தரவிடப்படுகிறது. வீட்டில் உள்ள பூஜை அறையில் மட்டும் தீபம் ஏற்றப்படுவதில்லை. வீடு முழுவதும் தீபம் ஏற்றப்படுகிறது. எனவே, நிகழாண்டு முதல் தீபத்தூணிலும் காா்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவைச் செயல்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை என்றும், உத்தரவைச் செயல்படுத்துவதில் எந்தக் குறுக்கீடும் இல்லாததை மதுரை மாநகர காவல் துறை ஆணையா் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தெரிவித்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது