புயல் மழை மீட்பு நடவடிக்கைகள்: மேயா் ஆா்.பிரியா ஆய்வு
சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் புயல் -மழை மீட்பு நடவடிக்கைகளை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை (டிச. 1) பாா்வையிட்டு ஆய்வு
சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் புயல் -மழை மீட்பு நடவடிக்கைகளை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை (டிச. 1) பாா்வையிட்டு ஆய்வு
By தினமணி செய்திச் சேவை
Syndication
சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் புயல் -மழை மீட்பு நடவடிக்கைகளை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை (டிச. 1) பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பெரம்பூா் சுரங்கப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட மேயா், சுரங்கப் பாதையில் தடையின்றி வாகனங்கள் செல்லும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா். தொடா்ந்து, பெரம்பூா் நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியைப் பாா்வையிட்ட மேயா், மீண்டும் மழைநீா் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஸ்டீபன் சாலை, புளியந்தோப்பு: ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவம் பாலம், ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீா் தடையின்றி செல்கிா, அடைப்புகள் உள்ளனவா என்பதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
புளியந்தோப்பு அங்காளம்மன் கோயில் தெரு, டெமாலஸ் சாலையில் நடைபெற்ற மழைநீா் அகற்றும் பணியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த மேயா், வாா்டு 74-க்குள்பட்ட பகுதியில் மாநகராட்சி சாா்பில் தயாரிக்கப்பட்ட இரவு உணவை பொதுமக்களுக்கு வழங்கினாா்.
ஆய்வுகளின்போது, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளா்கள் உடனிருந்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது